கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் யெலஹங்கா பகுதியில் ஒரு நபர் குப்பையில் பிளாஸ்டிக் கவருடன் இறந்த குழந்தையின் சடலத்தை வீசியுள்ளார். இதனை அடுத்து குப்பை குவியலில் பிளாஸ்டிக் பையில் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதை கண்ட பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அந்தத் தகவலின்படி விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த விசாரணையில், குப்பையை போட்டு சென்ற அந்த நபர் ஒரு 17 வயது சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் என்பது தெரியவந்தது. அந்த 17 வயது சிறுமி தான் பிளாஸ்டிக் கவரில் குப்பையோடு குழந்தையையும் வைத்து பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரியாமல் அவரை குப்பையை போட வைத்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதன் பின் காவல்துறையினர் அந்த 17 வயது சிறுமியிடம் நடத்திய விசாரணையில், இறந்த குழந்தை தனக்கு பிறந்த குழந்தை என்பதை சிறுமி ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அந்த சிறுமி அப்பகுதியில் காய்கறி விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் இருவரும் உறவில் இருந்ததால் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனால் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல் சிறுமி தனக்கு 8வது மாதத்தில் வலி ஏற்பட்டபோது தனது தோழி ஒருவரின் உதவியுடன் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்ததும் இறந்து விட்டதாகவும், அதனால் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்து குப்பையை தொட்டியில் போட்டு விடுமாறு கூறியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்தக் குப்பையை வாங்கிய நபர் பையில் என்ன உள்ளது என்பது தெரியாமலேயே அதனை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காட்சியை ஆய்வு செய்த காவல்துறையினர் பக்கத்து வீட்டுக்காரர் மீது எந்தவித குற்றமும் இல்லாததால் அவரை வீடு திரும்ப அனுமதித்துள்ளனர்.
அதன் பின் அந்தப் சிறுமியின் வாக்கு மூலத்தை வைத்து சிறுவயதிலேயே சிறுமியை பாலில் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய குற்றத்திற்காக ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.