“ஏன் இங்க வந்து குப்பையை கொட்டுற”..? பெண்ணுடன் பக்கத்து வீட்டுக்காரர் தகராறு… கோபத்தில் லாரியை வைத்து… பதற வைக்கும் வீடியோ..!!!
SeithiSolai Tamil April 21, 2025 06:48 AM

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா. இவர் நேற்று காலை தன்னுடைய வீட்டின் அருகே குப்பைகளை கொண்டு கொட்டியுள்ளார். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பூபதி என்பவர் அனிதாவிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் இது பற்றி தன்னுடைய நண்பர் பாலமுருகன் என்பவரிடம் பூபதி கூறினார்.

 

 

View this post on Instagram

 

இதைத்தொடர்ந்து பாலமுருகன் மதியம் திடீரென ஒரு லாரியை எடுத்து வந்தார். இது தொடர்பாக அனிதா மீண்டும் தகராறு செய்த நிலையில் அவர் கோபத்தில் அனிதாவின் காரின் மீது ஏற்றி நொறுக்கினார். அதோடு அனிதாவின் குடும்பத்தின் மீதும் லாரியை ஏற்ற முயன்றார். இந்த லாரியை பார்த்து அங்கிருந்த பெண்கள் அனைவரும் பதறி ஓடிய நிலையில் கார் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.