ஜனநாயகன் தமிழ்நாடு ரிலீஸ் தொகை இவ்வளவு கோடியா?!.. போட்டி போடும் 4 பேர்!….
CineReporters Tamil April 20, 2025 04:48 PM

Jana nayagan: கோட் படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். மேலும், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. படம் துவங்கும் போது இது தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது.

ஆனால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அந்த எண்ணத்தை மாற்றியது. ஏனெனில், அரசியல் கட்சி தொண்டர்களுக்கு முன்னால் விஜய் செல்பி எடுப்பது போல அந்த போஸ்டர் உருவாக்கப்பட்டிருந்தது. எனவே, இது அரசியல் தொடர்புடைய வேறு கதையா? இல்லை பகவந்த் கேசரி கதைய கொஞ்சம் மாற்றி அதில் அரசியலை கலந்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

ஏனெனில் இந்த படத்திற்கு பின் விஜய் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றே பலரும் நினைக்கிறார்கள். ஏனெனில், இனிமேல் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, இந்த படம் விஜயின் கெரியரில் ஒரு முக்கியமான படமாக அமையவிருக்கிறது.

#image_title

அதனால் விஜய் ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது குவிந்திருக்கிறது. விஜய் அரசியலுக்கு வரவுள்ளதால் கண்டிப்பாக இந்த படத்தில் அரசியல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. குறிப்பாக ஓட்டு போடுவதான் முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் விஜய் இந்த படத்தில் பேசுவார் என்கிறார்கள்.

ஒருபக்கம் விஜயின் கடைசிப் படம் என்பதால் இந்த படத்தை நாம் வாங்கி வெளியிட வேண்டும் என்கிற ஆசை திரையுலகில் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகன் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை வாங்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பேசி வருகிறது. ஆனால், தமிழகம், கேரளா ஆகிய இரண்டு உரிமையையும் சேர்த்து 100 கோடி சொல்கிறது இப்படத்தை தயாரிக்கும் கே.வி.என் புரடெக்ஷன்.

இது மிகவும் அதிகம் என்பதால் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் யோசித்து வருகிறது. ஒருபக்கம் இப்படத்தின் தமிழக உரிமையை வாங்க ஏஜிஎஸ் நிறுவனம், கலைப்புலி தாணு, மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் மற்றும் பென் மீடியா போன்ற நிறுவனங்களும் முயற்சி செய்து வருகின்றனவாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.