அவர் இப்போது தமிழ்நாட்டுக்கும் வந்து, என்னை மாநிலத் தலைவராக்கி, கூட்டணியையும் அமைத்துக் கொடுத்துள்ளார். எனவே, பாஜக - அ.தி.மு.க கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு இல்லை என்றும், அவுட் ஆப் கண்ட்ரோலுக்கு போய்விட்டது எனவும் முதல்வர் கூறியிருக்கிறார்.
விலைவாசி உயர்வு, பாலியல் வன்கொடுமை, எங்கு பார்த்தாலும் கஞ்சா, போதைப்பொருள் கொடுமை, சட்டம் ஒழுங்கு சரியில்லை, பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து, வெட்டு, சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றை எல்லாம் மக்கள் சிந்தித்து சீர்தூக்கி பார்க்கின்றனர். எனவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க வின் ஆட்சி அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகப் போகிறது. தி.மு.க வில் அமைச்சர் பொன்முடி மட்டுமின்றி அனைத்து அமைச்சர்களும் பெண்களை மதிப்பது கிடையாது. அதிமுக - பாஜக கூட்டணியை முதல்வரால் தோற்கடிக்க முடியாது. எனவே, ஆட்சி போய்விடும் என்ற பயம் இப்போது தி.மு.க வுக்கு வந்து விட்டது” என கூறியுள்ளார்.