ரயிலில் செல்லும் பெண்களிடம் ஆபாச சில்மிஷம் ... சென்னை ஆசாமி கைது!
Dinamaalai April 22, 2025 03:48 AM

சென்னை வியாசர்பாடி பகுதியில் ரயிலில் செல்லும் பெண்களைப் பார்த்து ஒருவர் ஆபாச செய்கை செய்வதாகவும்  நிர்வாணமான நிலையில் ஒருவரை அடிக்கடி அப்பகுதியில் மக்கள் பார்த்ததாகவும் அவ்வப் போது ரயிலில் செல்லும் பெண்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

இது குறித்து வியாசர்பாடி மற்றும் ஓட்டேரி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், ஓட்டேரி போலீசார் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் வியாசர்பாடி ரயில் நிலையத்திற்கும், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில் மெதுவாக செல்லும் போது ரயில் பெட்டியில் பெண்கள் பெட்டியில் உள்ள பெண்களை பார்த்து ஆபாசமான செய்கை செய்வதும் அவர்களைப் பார்த்து சுய இன்பம் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது.

பல பேர் ரயிலில் செல்வதால் இது குறித்து புகார் அளிக்கவில்லை ரயில் வேகமாக செல்லுவது மற்றும் ரயிலில் இருந்து கீழே இறங்கி வர முடியாது என்பதால் தொடர்ந்து இவர் இது போன்று செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் முனுசாமிக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளார். இவர் கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து முனுசாமி மீது வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.