கமலையும், சிம்புவையும் சேர்த்து எப்படி படம் எடுத்தாரு மணிரத்னம்..? அது அவ்ளோ சாதாரண விஷயமில்லையே!
Tamil Minutes April 22, 2025 08:48 AM

தக்லைஃப் படத்தில் கமலும், சிம்புவும் இணைந்து நடிக்க மணிரத்னம் இயக்கி வருகிறார். இதுகுறித்து பிரபல இயக்குனர் நந்தவனம் நந்தகுமார் என்ன சொல்றாருன்னு பாருங்க.

சிம்புவோட தனிப்பட்ட முறையில பழகுனா அவரு உசுரக் கொடுக்குறவரு. சும்மா பேசணும். புகழணும்னு அவசியம் கிடையாது. நாலு பேரு முன்னால என்கிறபோது தான் ஹீரோங்கற கெத்து வந்துடும். மணிரத்னம் லெஜண்ட். அங்கே போய் வாலாட்ட முடியாது. அடக்கித்தான் வாசிக்கணும்.

வேற வழியில்லை. நாலு பேரு சொன்னதை வச்சின்னா பொன்னியின் செல்வன்ல வாய்ப்பு கிடைக்காமப் போகலாம். ஆனா அந்தப் படத்துக்குக் கிரியேட் பண்ண கெட்டப் தான் தக் லைஃப்ல நீளமான முடியை எல்லாம் வச்சி நடிக்க விட்டுருக்காரு.

மணிரத்னமே இதை மேடையில சொல்றாரு. சிம்புவையும், கமலையும் வச்சி தக்லைஃப் பண்ணலாம்னு சுஹாசினிக்கிட்ட முதல்ல சொன்னாராம். அப்போ அதுக்கு அவங்க ஐயய்யோ வேணாம்னு சொன்னாங்களாம். சிம்பு ஒழுங்கா வருவாரான்னு இல்ல. கமல் வந்தா ஒழுங்கா பண்ணமாட்டாரு.

இவரு இஷ்டத்துக்கு ஒண்ணை பண்ணுவாரு. அவரு வந்தா பிரச்சனை. சிம்பு வரலன்னா பிரச்சனை. ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்றது அவ்வளவு சாதாரண விஷயமே கிடையாது. போகாத ஊருக்கு வழி சொல்ற மாதிரி அது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தக் லைஃப் படத்துக்கான புரொமோஷன் வேலைகள் ஒரு புறம் படுஜோராக நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிள் கூட ஜிங்குச்சா என்று கமலின் வரிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏஆர்.ரகுமான் இசை செம. படம் ஜூன் 5ல் ரிலீஸ்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.