வெந்தயத்தை நெயில் வறுத்து மோரில் கலந்து சாப்பிட எந்த நோய் ஓடிடும் தெரியுமா ?
Top Tamil News April 22, 2025 10:48 AM

பொதுவாக  அந்த காலத்தில் பல வீடுகளில் பாட்டிகள்தான் டாக்டர் .அவர்கள் சொல்லும் வைத்திய குறிப்புகளுக்கு ஈடு இணையில்லை .எந்தவிதமான பக்க விளைவுகள் இன்றி அவர்கள் சொல்லும் மருத்துவ குறிப்பு சிலவற்றை நாம் இப்பதிவில் காணலாம்

1.சிலருக்கு சளி தொல்லை இருக்கும் .குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் ,அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும்.
2.சிலருக்கு இம்மியூனிட்டி இல்லாமல் இருமல் வரும் .தேனை தினமும் வெந்நீரில்  சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
3.சிலர் உடல் இளைக்க படாத பாடு படுவர் ,தினமும் காலையில்  கருவேப்பிலைகளை சாப்பிட்டு வர, 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.


4. முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர ஆண்மைக்குறைவுக்கு பலன் கிடைக்கும்.
5. சிலர் தினம் தூக்கமின்றி அவதி படுவர் ,சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல நன்றாக தூக்கம் வரும்
6. சிலர் பல்வலியால் துடிப்பர் .துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வர வலி குறையும்.
7.அருகம்புல்லைச்  வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்
8.சிலர் அடிக்கடி வயிறு பிரச்சினை வந்து அவதிப்படுவர் ,அப்போது வெந்தையத்தை நெயில் வருத்து மோரில் கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் குணமடையும்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.