கமல் குறித்து இயக்குனர் நந்தவன் நந்தகுமார் ஒரு சில அபூர்வ தகவல்களை கிங்வுட் நியூஸ் என்ற யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியன் படத்தின் போது ஷங்கர், வசந்தபாலன் கமலை வைத்து எவ்ளோ கஷ்டப்பட்டாங்கன்னும் சொல்லி இருக்கிறார். வாங்க பார்க்கலாம்.
இந்தியன் படத்தின் படப்பிடிப்பின்போது கமல் ஒரு காட்சியின்போது கடுமையாக டென்ஷன் ஆகி கத்தி விட்டாராம். அந்தப் படத்தில் உதவி இயக்குனராக வசந்தபாலன் பணியாற்றியுள்ளார். அவர் வயதான கமல் நடிப்பதைப் போல நடித்துக் காட்டியுள்ளார். ஒரு ஹீரோ மெட்டீரியலை அவர் பண்ணிருக்காரு. அதைப் பார்த்து கமல் டென்ஷன் ஆகி கத்திட்டாரு.
அது எப்படி ஒரு கிழவன் இப்படி எல்லாம் பண்ண முடியும்னு கேட்குறாரு கமல். என்னோட கெட்டப் வந்து கிழவன். நான் எப்படி உருண்டு வந்து என்னோட கைவிலங்கை அறுக்க முடியும்? படத்துலயே நிறைய பேரை அடிப்பாரு. சண்டை போடுவாரு. அவரு அந்தப் புரிதல் இல்லாம இருந்துருக்காரு. நேதாஜி சுபாஷ் படையில வீரதீர இளைஞனாக இருந்தவரு இந்த வயசிலும் என்னோட உடல் பலம் 30 வயசு இளைஞனாகத்தான்டா இருக்குங்கறதைக் காட்டணும்.
அதுக்காகத்தான் டைரக்டர் அந்த சீனை எல்லாம் வைக்கிறாரு. அதைப் புரிதலே இல்லாம நான் வயசானவன்தான்டா. நான் பொறுமையாத்தான்டா இருக்கணும்னு சொல்றாரு. அந்த மைன்டைப் புரிய வைக்குறதுக்குள்ளேயே அவங்களுக்கு விடிஞ்சிருக்கும். அந்தச் சிக்கல் மணிரத்னத்துக்கும், வசந்தபாலனுக்கும் இருந்துருக்கும். இல்லாம எல்லாம் இருக்கவே இருக்காது. நான் வந்து கற்பனைக்கு பேசல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.