#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – குஜராத் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா – 21.04.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
குஜராத் டைடன்ஸ் அணி (198/3, ஷுப்மன் கில் 90, சாய் சுதர்ஷன் 52, ஜாச் பட்லர் ஆட்டமிழக்கமல் 41, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ஆண்ட்ரூ ரசல் தலா ஒரு விக்கட்) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை (159/8, அஜிங்க்யா ரஹானே 50, ரகுவன்ஷி ஆட்டமிழக்காமல் 27, ரசல் 21, சுனி நரேன் 17, ரிங்கு சிங் 17, பிரசித் கிருஷ்ணா 2/25, ரஷித் கான் 2/25, சிராஜ், இஷாந்த் ஷர்மா, வாஷிங்க்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்) 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (36 பந்துகளில் 52 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 90 ரன், 10 ஃபோர், 3 சிக்சர் ஒரு மிக அருமையான தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதகக் களமிறங்கிய ஜாஸ் பட்லர் (23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 41 ரன், 8 ஃபோர்) இன்னிங்க்ஸ் இறுதி வரை விளையாடினார். ராகுல் திவாத்தியா (பூஜ்யம் ரன்) இன்று சோபிக்கவில்லை. ஷாருக் கான் ( 5 பந்துகளில் 11 ரன்) கடைசி ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 198 ரன் எடுத்தது.
199 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அஜிங்க்யா ரஹானே (36 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (13 பந்துகளில் 27 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்றாவர்களால் அதிரடியாக ஆட்டமுடியவில்லை.
அவர்களின் நன்கு விளையாடக்கூடிய மட்டையாளர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் (1 ரன்) (டி காக் இன்று விலையாடவில்லை), சுனில் நரேன் (13 பந்துகளில் 17 ரன்), வெங்கடேஷ் ஐயர் (14 பந்துகளில் 17 ரன்), ரசல் (15 பந்துகளில் 21 ரன்), ரமந்தீப் சிங் (1 ரன்), மொயின் அலி (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று அவர்களது வழக்கமான ஆட்டத்தை ஆடமுடியவில்லை. இதனால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து 39 ரன் களில் தோல்வியைத் தழுவியது.
குஜராத் அணியின் அணித்தலைவர், இன்று 90 ரன் எடுத்த ஷுப்மன் கில் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
News First Appeared in