Breaking: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்கள்… ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல்…!!!
SeithiSolai Tamil April 22, 2025 08:48 PM

தமிழக ஆளுநர் ரவி அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களை நிறைவேற்றாமல் இருப்பதாக குற்றம் சாட்டி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் எனக் கூறி அதனை ரத்து செய்தது.

பின்னர் அந்த பத்து மசோதாக்களுக்கும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியதோடு மசோதாக்கள் மீது இன்னும் 90 நாட்களுக்குள் ஆளுநர் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 8 தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதோடு தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.