தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவரது தொண்டர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் 330 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று வழிபாடு செய்தனர்.
இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கநல்லூர் மெத்தவாடி தவெக கட்சியை சேர்ந்த கானா ஆகாஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் 8 பேர் சேர்ந்து வருகிற தேர்தலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வேளாங்கண்ணி மாதா கோவிலில் பாதயாத்திரை வந்தனர்.
இவர்கள் 10 நாட்கள் 330 கிலோமீட்டர் பாதயாத்திரை ஆக வந்துள்ளனர். புனித வெள்ளியன்று வேளாங்கண்ணி புதிய பேராலயத்திலிருந்து, பழைய மாதா கோவில் சிலுவை பாதையில் முழங்காலால் முட்டி போட்டு 750 மீட்டர் சென்று தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற பேனரை கையில் ஏந்தி கொண்டு பிராத்தனை செய்தனர்.