Breaking: லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் “நான் முதல்வன்” திட்டம்…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்…!!!
SeithiSolai Tamil April 22, 2025 09:48 PM

கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி, நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பம், பசுமை எரிசக்தி ,மொழி சார்ந்த தகவல் தொடர்பு திறன்கள், நிர்வாகம் கணினி பயிற்சி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் மட்டும் முதல்வன் அல்ல. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வன் தான். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் சிவச்சந்திரன் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு தரவரிசையில் முதல்வனாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்த திட்டம் வரும் காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளி ஏற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகி உள்ளது என்று .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.