இனி தங்கம் வாங்குவது கஷ்டம் தான் போல...சவரனுக்கு ரூ.2200 உயர்வு..!
Newstm Tamil April 22, 2025 08:48 PM

தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

21-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,120

20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.