CSK அணியின் நட்சத்திர வீரர் டெவோன் கான்வேயின் தந்தை காலமானார்!
Newstm Tamil April 22, 2025 08:48 PM

சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்தவர் டெவான் கான்வே. தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் கிரிக்கெட் வாய்ப்புகளுக்காக நியூசிலாந்தில் குடியேறினார். அவர் நியூசிலாந்து அணியிலும் இடம்பெற்றுள்ளார்.

இதனிடையே, நடப்பு ஐபிஎல் தொடரில் 3 ஆட்டங்களில் மட்டுமே டெவான் கான்வே விளையாடினார். அதன்பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நியூசிலாந்து திரும்பினார்.

இந்நிலையில், டெவான் கான்வேயின் தந்தை டெண்டன் கான்வே உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தந்தையின் உடல்நலம் கருதியே டெவான் கான்வே ஐ.பி.எல். தொடரின் பாதியில் நியூசிலாந்து புறப்பட்டுள்ளார். வயதுமுதிர்வு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட டெண்டன் கான்வே உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தது தொடர்பாக சி.எஸ்.கே. நிர்வாகம் நேற்று எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ளது. அதேவேளை, ஞாயிற்றுக்கிழமை மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.