நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்.... பரபரக்கும் தெலுங்கு திரையுலகம்!
Dinamaalai April 22, 2025 03:48 PM

 


 
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் ரூ.5.9 கோடி பெற்றதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.  ஏப்ரல் 16ம் தேதி சோதனை நடந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல்எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் மகேஷ் பாபு நடித்திருந்தார்.

 

விளம்பரப் படத்திற்காக கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து ரூ.5.90 கோடி பெற்றுள்ளார் மகேஷ் பாபு. இந்நிலையில், ரூ.5.9 கோடி பெற்றதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  
 
இதன் காரணமாக ரியல் எஸ்டேட் நிறுவன வழக்கில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 28ம் தேதி ஐதராபாத் அலுவலகத்தில் ஆஜராக நடிகர் மகேஷ்பாபுவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. சாய் சூர்யா, சுரானா  ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.