நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கும் நிலையில் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். தேர்தலுக்கான வியூகம் அமைக்கப்படும். சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீர்கள் இனி இந்த சீமானின் ஆட்டத்தை பார்ப்பீர்கள்.
கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலிலும் ஐந்தாவது முறையாக தனித்து தான் போட்டியிடுவோம். நாங்கள் அரசியல் வியாபாரம் செய்ய வந்தவர்கள் கிடையாது. கூட்டணி அமைத்து வெற்றி பெற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டார்.
மேலும் முன்னதாக தனக்கும் விஜய்க்கும் துணை முதல்வர் பதவி தருவதாகவும் 90 சீட் தருவதாகவும் அதிமுக கூட்டணி பேரம் பேசியதாக சீமான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.