இயக்குனர் சிகரம் பாலசந்தரிடம் உதவியாளர்களாக பலர் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தான் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா. பாலசந்தருடன் பணியாற்றிய அனுபவங்களை இப்படி பகிர்ந்துள்ளார்.
ரஜினி சார் படத்துல ஒரு டயலாக் வரும். பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லன்னு. ஆக்சுவலா அந்த டயலாக் கே.பாலசந்தருக்குப் பொருந்தும். நான் 80ஸ்ல தான் அவரு கூட ஜாய்ன் பண்ணினேன். 70ஸ், 60ஸ்ல எல்லாம் அவரு ரொம்ப டெரர்ரா இருப்பாராம். டென்ஷன்ல அப்படியே நகத்தைக் கடிச்சிக்கிட்டே இருப்பாராம். கைவிரல்ல எல்லாம் ரத்தம் வந்துருமாம். மேக்கப் மேன் சுந்தர மூர்த்தி ஆரம்பத்துல இருந்தே அவருகூட இருக்காரு.
அவரு தான் சொல்வாரு. கையை அப்படியே நீட்டுவாராம். டிஞ்சர் எல்லாம் போட்டு துடைச்சி டச் பண்ணுவாராம். தாதா சாகேப் பால்கே, கலைமாமணி, பத்மஸ்ரீ, பிலிம்பேர், மாநில விருதுகள்னு நிறைய வாங்கி இருக்காரு. 100 படம் எடுத்தாரு. எல்லாமே மைல் கல். நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, மரோசரித்ரா, தண்ணீர் தண்ணீர், தில்லுமுல்லு, வறுமையின் நிறம் சிவப்பு, ஏக்துஜே கேலியேன்னு வரிசையா சூப்பர்ஹிட் படங்கள்.
அந்த ஸ்கிரிப்ட், அந்த கேரக்டர் எல்லாமே அதிசயம்தான். அவருடைய படங்களைப் பார்த்து படிச்சா நிறைய பாடங்கள் நமக்குக் கிடைக்கும். அவருகூட 14 படங்கள் பண்ணினேன். அதுல ஒரு படம் மறக்க முடியாது. சிந்து பைரவி.
அந்தப் படம் பண்றதுக்கு முன்னாடி அடுத்து என்ன பண்ணலாம்? என்ன மாதிரி கதை பண்ணலாம்னு பாலசந்தர் சார், அனந்து சார் எல்லாம் உட்கார்ந்து யோசிச்சிக்கிட்டே இருப்பாங்க. அபூர்வராகங்கள் மாதிரி கர்நாடக சங்கீதத்தைக் கொண்டு வரலாம். அந்தக் காலத்துக்கு என்ன பண்ணலாம்? அப்படியே மியூசிக் டைரக்டரை மாற்றலாம். எம்எஸ்வி தான் அதுவரைக்கும் இருந்தாரு. அப்போ இளையராஜா பீக்ல இருக்கும்போது அவர் உள்ளே வந்தாரு. நடிகர்ல சிவகுமார் அதுக்கு முன்னாடி சொல்லத்தான் நினைக்கிறேன்ல நடிச்சிருந்தாரு.
அவரு வந்தாரு. சரிதாவைத் தான் இதுக்கு முன்னால நிறைய படங்கள்ல நடிக்க வச்சிருக்கோம். அதனால சுஹாசினி உள்ளே வந்தாரு. சுலக்ஷனாவுக்கு ஒரு ரோல். அப்படி உருவானதுதான் சிந்து பைரவி. முதல் முறையாக லோகநாத் ரெட்டின்னு புது கேமராமேன். என்ஆர்.கிட்டு தான் அதுவரை எடிட்டரா இருந்தாரு. அவரை விட்டுட்டு அவரோட அசிஸ்டண்ட் தினேஷ்குமார் உள்ளே வர்றாரு. இப்படியே மொத்த யூனிட்டையும் மாற்றி அவர் எடுத்த படம்தான் சிந்து பைரவி என்கிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
பாலசந்தர் சாருக்கிட்ட வேலை செய்ய தனித்திறமை வேணும். அவரு ரொம்ப ஃபாஸ்ட்டா சொல்வாரு. கேமராமேன்கிட்ட. அவரு என்ன சொன்னாருன்னு எங்கிட்ட கேட்பாரு. அப்புறம் சொன்னதும் கரெக்டா செய்வார். பின்னாடி பாலசந்தரே சொல்லி பாராட்டியதாகவும் சுரேஷ்கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
director shankar இயக்கிய Sivaji the boss படத்தில்தான் ‘பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்கிற punch டயலாக் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.