கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் நேற்று காலை உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்ததாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவருடைய மறைவு உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னுடைய கடைசி ஆசையாக காசாவில் நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்று கூறியதாக வாடிகன் தெரிவித்தது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்திய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் போப் பிரான்சிஸ் மறைவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு துக்கதினம் அனுசரிக்கப்படும் என்று தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இதே போன்று இந்தியாவிலும் போப் பிரான்சிஸ் மறைவை முன்னிட்டு 3 நாட்கள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.