GT vs KKR: ``முன்னேறிச் செல்லுங்கள்!'' - சாய் சுதர்சனை வாழ்த்திய சிவகார்த்திகேயன்
Vikatan April 22, 2025 04:48 PM

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 39 -வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகள் இடையே நடைபெற்றது.

இதில் முதலாவதாக பேட்டிங் செய்த குஜராத் அணி நன்கு விளையாடி 198 ரன்கள் குவித்தது.

இதற்கு அணியின் ஓப்பனார்கள் சாய் சுதர்சனின் அரை சதமும் சுப்மன் கில்லின் 90 ரன்களும் மிக முக்கியமானது.

இந்தப் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிப்பெற்றது .

சிவகார்த்திகேயன்

போட்டிக்கு முன்பு பேட்டிங்கில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு கிடைக்கும் ஆரஞ்சு கேப் பட்டியலில் 365 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார் சாய் சுதர்சன்.

முதலிடத்தில் லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் உடன் முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் மூலம் மொத்தமாக 417 ரன்கள் குவித்து பூரானை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் சாய் சுதர்சன்.

சாய் சுதர்சனின் இந்த கவனிக்கத்தக்க ஆட்டத்திற்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சாய் சுதர்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். "நீங்கள் விளையாடும் விதம் பிடித்திருக்கிறது. முன்னேறிச் செல்லுங்கள்.

உங்களின் இந்த மாபெரும் திறமையை இந்திய அணியின் ஜெர்சியில் காண காத்திருக்கிறேன் " என சாய் சுதர்சன் ஆரஞ்சு கேப் கைப்பற்றியதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

சாய் சுதர்சன் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.