தங்கத்தை உருக்கி பணமாக தரும் ATM.. மனுசன் எதெல்லாமோ கண்டுபுடுக்கிறான், சீனா காரன் என்ன கண்டுபுடுச்சிறுக்கான் பாரேன்!
ET Tamil April 22, 2025 01:48 PM

சீனாவின் ஷாங்காயில் மிகவும் பிரபலமான மால்களில் அனைவரின் கவனத்தையும் ஒரு ஏடிஎம் ஈர்த்துள்ளது. சிரிய ஏடிஎம் என்றாலும் செய்யுற வேலை பெரிசுங்க.. இப்பொழுது தங்கத்தை அடமானமே வைக்காமா நேரடியா நம்மலே ஏடிஎம் சென்று அதை உருக்கி அதை பணமாக எடுத்துக்கொள்ளாலாம் என்றால் அது மக்களுக்கு ஒரு பெரிய நிம்மதியான செய்திதானே.. நிஜமா இப்படியொரு ஏடிஎம் இருக்கான்னு கேட்டீங்கன்னா.. அட ஆமாங்க இருக்கு அதுவும் நம்ம சீனா-லதான். ”மனுசன் எதைலெல்லாமோ கண்டுபுடிக்கிறான், சீனா காரன் என்ன கண்டுபுடுச்சிறுக்கான் பாரேன்” என்ற டயலாக் காமெடியாக வந்தாலும் அதை சீனர்கள் சீரியஸாக எடுத்துட்டாங்க போல இப்படியொரு அதிசய ஏடிஎம்-ஐ கண்டுபிடிச்சிறுக்காங்கஇப்பொழுது தங்கம் விலை உலக அளவில் உச்சம் தொட்டு வருவதால் மக்கள் தங்கத்தை பணமாக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சீனாவின் இந்த தங்க ஏடிஎம்-இல் நீங்கள் தங்கம் விலை உயரும்போது உங்களிடம் உள்ள தங்கத்தை போட்டால் போதும் அது உருக்கி பணமாக மாற்றி உங்களுக்கு கிடைத்துவிடும்.இந்த ஏடிஎம்-இல் தங்கம் 1,200 டிகிரி செல்சியஸில் உருக்கப்படுகிறது. இது நகைக் கடைகளில் சென்று மக்கள் தங்கத்தை அடமானம் வைக்கும் நேரத்தை மொத்தமாக குறைக்கிறது. நீங்கள் தங்கத்தை உருக்கி பணமாக்கும்போது அப்பொழுது என்ன விலையோ அதற்கான பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம். அதுவும் இந்த சேவைக்கான கட்டணமும் கம்மிதான் என X தளத்தில் பகிர்ந்த நபர் தெரிவித்துள்ளார்.இந்த அதிசயத்தை பார்த்த அந்த இந்திய நபர் இந்த நவீன தங்கத்த உருக்கி பணமாக்கும் ஏடிஎம் இந்தியாவிற்கு எப்போது வரும் என ஆவலாக இருப்பதாக் கூறி, விரைவில் இது இந்தியாவிற்கு வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார். பார்க்கலாம்..