Siragadikka Aasai: ரோகிணிக்கு மீனா கொடுக்கும் ஐடியா.. ஸ்ருதியிடம் கெஞ்சும் ரவி.. மீண்டும் முத்து செய்யும் தவறு..!
Tamil Minutes April 22, 2025 11:48 AM

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் இன்றைய எபிசோடில், மனோஜ்க்கு காய்ச்சல் என்றவுடன் பதற்றம் அடைந்த ரோகிணி, மாத்திரை கொடுத்து கவனிக்கிறார். ரோகிணியின் கவனிப்பை பார்த்து நெகிழும் மனோஜ் தூங்க சொல்லுகிறார். பின்னர் ரோகினி வருத்தத்துடன் தூங்கும் காட்சிகள் இடம் பெற்றன.

இதனைத் தொடர்ந்து, ரவி மற்றும் சுருதி இடையே ரெஸ்டாரன்ட் பிரச்சனை குறித்து வாக்குவாதம் நிகழ்கிறது. “ஒருவன் என்னை கேலி செய்கிறான் என்றால், ஒரு கணவனாக நீ எனக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். ஆனால் நீ எனக்கு எதிராக பேசுகிறாய்,” என சுருதி கூற, “நான் உனக்கு எதிராக பேசவில்லை. ரெஸ்டாரன்ட் மரியாதை கெட்டுவிடும் என்பதற்காகவே கூறினேன். யாராவது உன்னை தவறாக பேசியிருந்தால், நீ என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்,” என ரவி பதிலளிக்கிறார்.

“அப்படி என்றால், என்னால் என்னை காப்பாற்றிக் கொள்ள முடியாது. உன்னைத்தான் நம்பி இருக்க வேண்டுமா?” என சுருதி வாதிடுகிறார். அந்த நேரத்தில் நீத்து போன் செய்து சுருதியிடம் பேசுகிறார். “ஒரு பெண்ணாக உங்களுக்கு நேர்ந்த சம்பவத்திற்கு நான் உங்களை பாராட்டி இருக்க வேண்டும். ஆனால் நான் புரிந்து கொள்ளாமல் ஒரு ரெஸ்டாரண்ட் ஓனராக நடந்து கொண்டேன். அதற்காக மன்னிக்கவும்,” என கூற, சுருதியும் “பரவாயில்லை,” என கூறி “நீங்களாவது என்னை புரிந்து கொண்டீர்களே?” என சுருதி கூற, அதன் பிறகு ரவி சுருதியிடம் மன்னிப்பு கேட்பதுடன் அந்தக் காட்சிகள் முடிவடைகின்றன.

அடுத்து, மீனாவிடம் அண்ணாமலை “முத்து இன்னும் வரவில்லையா?” எனக் கேட்கிறார். “ஆமாம்,” என மீனா பதிலளிக்க, “நீ போன் செய்து, என்ன ஏது என்று கேள்,” எனக் கூறுகிறார். மீனா முத்துவுக்கு போன் செய்ய, “எனக்கு ராத்திரி சவாரி இருக்கிறது. அதனால் வீட்டுக்கு வரமாட்டேன்,” எனக் கூறிவிட்டு முத்து போனை கட் செய்து மீனா மீது கோபத்தை காட்டி மீண்டும் மீண்டும் தவறு செய்கிறார்.

இந்த நிலையில், ரோகிணி கிச்சனில் கஞ்சி போட்டுக் கொண்டிருக்க, அங்கு வரும் மீனா “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்கிறார். “நான் கஞ்சி போடுகிறேன்,” என ரோகிணி பதிலளிக்கிறார். “என்னுடைய நிலைமை உங்களுக்கு வந்து விடக்கூடாது. எனவே, நீங்கள் உடனே பார்வதி ஆண்டியிடம் பேசிய அத்தையை சமாதானம் செய்யச் சொல்லுங்கள்,” என மீனா கூற, ரோகிணி அவரை வெறித்து பார்க்க அப்போது “நீ என் விஷயத்தில் தலையிடக்கூடாது என்று தான் சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு தெரிகிறது. என் மனதுக்கு தோன்றியதை சொன்னேன், அதற்கு மேல் உங்கள் இஷ்டம் என கூறுகிறார்.

அந்நேரம் விஜயா வந்து, “நீ என்ன செய்கிறாய்? எதற்காக கஞ்சி போடுகிறாய்?” எனக் கேட்கிறார். மனோஜ்க்கு காய்ச்சல்,” என ரோகிணி கூற, உடனே மனோஜை சென்று பார்க்கும் விஜயா, “எதற்காக திடீரென்று காய்ச்சல் வந்தது?” எனக் கேட்கிறார். “ஒருவேளை ரோகிணி இடம் பேசாமல் இருந்ததால் தான் காய்ச்சல் வந்திருக்கலாம்,” என மனோஜ் கூறுகிறார்.

உனக்கு காய்ச்சல் அடிக்கிறது என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் முகத்திலேயே குத்துவேன்,” எனக் கூறும் விஜயா, “அந்த ரோகினி என்னை ஏமாற்றி இருக்கிறாள். ஒன்றும் இல்லாத அவள் கோடீஸ்வரி என்று சொல்லி ஏமாற்றி இருக்கிறார். எனவே, அவளிடம் இது பேசக்கூடாது,” என மீண்டும் எச்சரிக்கிறார்.

இந்த நிலையில், மறுநாள் காலை முத்து வரும் போது, முத்துவுக்கு அண்ணாமலை அறிவுரை கூறுகிறார். “இரவு சவாரி எல்லாம் போக வேண்டாம். பகலில் மட்டும் பார்த்தால் போதும். உடம்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம். அப்படியே சவாரி செய்வதாக இருந்தாலும், மீனாவிடம் சொல்ல வேண்டும்,” எனக் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோடில், மீனா பணத்தை கொடுக்க போய் வருகிறேன் என அண்ணாமலையிடம் சொல்ல, அதை கேட்ட விஜயா, சிந்தாமணிக்கு போன் செய்து எச்சரிக்கிறார். இதனையடுத்து மீனாவிடம் இருந்து சிந்தாமணி ஆட்கள் பணத்தை பிடுங்கும் காட்சியும் இடம்பெறுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.