அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்.... இந்தியா முழுவதும் 49 கோடி மக்களுக்கு வைட்டமின் D குறைபாடு!
Dinamaalai April 22, 2025 03:48 AM

 

இந்தியா முழுவதும் விட்டமின் டி குறைபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளின்படி 5 பேரில் ஒருவருக்கு வைட்டமின் D குறைபாடு இருப்பதாக இந்தியன் கவுன்சில் ஃபார் ரிசர்ச் ஆன் இன்டர்நேஷனல் எகனாமிக் ரிசர்ச் தெரிவித்துள்ளது. இது சுமார் 49 கோடி மக்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 

சூரியனிடமிருந்து வரும் UV-B கதிர்வீச்சு மனிதனின் தோலுக்கு நேரடியாக தட்டும்போது தான் வைட்டமின் D இயற்கையாக உருவாகிறது.ஆனால், நகர்ப்புற மாசுபாடு, படிகட்டு வீடுகள், மற்றும் மாறிய வாழ்க்கைமுறை காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே கிடக்கின்றனர். இதனால் UV-B கதிர்கள் தோலை அடையாமல் தவறுவதால், வைட்டமின் D உருவாக முடியாமல் போகிறது. 

இது குறித்து ICRIER வெளியிட்ட அறிக்கையின் படி, மக்கள் தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் நேரடி சூரிய ஒளியில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. வெயிலில் இருப்பது, வெளியே சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, மற்றும் வைட்டமின் D நிறைந்த உணவுகளை (மீன், முட்டை, பசுந்தெய்) உட்கொள்ளுதல் ஆகியவை தேவையான சத்தினை ஈட்ட உதவும். இந்த குறைபாடு நெஞ்சு வலி, முதுகு வலி, எலும்பு பலவீனம், மற்றும் எலும்பு முறிவுகள் ஆகியவற்றை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.