Simran: சமீபத்தில் சிம்ரன் பேசிய ஒரு கருத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்கி போட்டிருக்கிறது. எந்த நடிகையை பற்றி சிம்ரன் கூறினார்? சினேகாவா, லைலாவா, ரம்பாவா, ஜோதிகாவா என அவருடன் நடித்த சக நடிகைகளின் பெயர்களை பட்டியலிட்டு காட்ட ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள். இதைப் பற்றி சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு விளக்கமாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் .அதாவது ஒரு படத்தில் தான் நடித்த ஒரு கேரக்டருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்ததும் அதை தன்னுடன் பணியாற்றிய ஒரு சக நடிகைக்கு பகிர்ந்தேன்.
அதை பார்த்ததும் அந்த நடிகை உன்னை மாதிரி இந்த ஆன்ட்டி ரோல் பண்ணிட்டு பெருமை பேசுகிற ஆள் நான் கிடையாது என அந்த நடிகை கூறியிருந்தாராம். அந்த வார்த்தை தன்னை மிகவும் பாதித்தது என சிம்ரன் அந்த ஒரு மேடையில் தெரிவித்திருந்தார். இதைப் பற்றி மேலும் பேசிய சிம்ரன் ஆன்டி ரோல் பண்ணுவதில் என்ன ஒரு கேவலமான விஷயம் இருக்கிறது? அவர் அப்படி சொன்னதும் என்னால் தாங்க முடியவில்லை .அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த மேடையில் நான் இப்படி பேச வேண்டியதாக இருக்கிறது. அந்த நடிகையிடம் இப்படி ஒரு பதில் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை.
என்னுடன் சமாக்காலத்தில் நடித்த நடிகை தான் என்று சொல்லி இருந்தால் அந்த நடிகை யார் என நம்மால் கண்டுபிடித்து இருக்க முடியாது. ஆனால் அந்த நடிகை மாதிரி டப்பா கேரக்டரில் நடிக்கிற ஆள் நான் கிடையாது என கூறியதன் மூலமாகத்தான் அந்த நடிகை யார் என்று நமக்கு தெரிந்தது .ஏனென்றால் டப்பா கார்னெட்டல் என்ற ஒரு ஹிந்தி படம். அந்த ஹிந்தி படத்தில் நடித்தது யார் என்றால் அது ஜோதிகா. இதைப்பற்றி மேலும் கூறிய செய்யாறு பாலு சிம்ரன் ஒரு ஆகச் சிறந்த நடிகை. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. நடிகைகளாக இருக்கும் பட்சத்தில் சினிமா பின்புலம் இல்லாமல் இருந்தால் கூட வாய்ப்புகள் கிடைத்து விடும்.
ஆனால் ஒரு சில நடிகைகள் போராடி தான் இந்த சினிமாவிற்குள் வர வேண்டி இருக்கிறது. அப்படி வந்தவர்தான் சிம்ரன். ஏனெனில் சிம்ரனின் ஒரிஜினல் பெயர் ரிஷி பாலா, பஞ்சாபி குடும்பம். இரண்டு பெண் குழந்தைகள் ,ஒரு ஆண் பிள்ளை. சிம்ரனுக்கு ஆரம்பத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் அதிகம். அதுவும் ஹிந்தி சினிமாவில் எப்படியாவது போய் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது .ஆனால் சிம்ரனை பார்த்தால் பஞ்சாபி முகம் மாதிரியே இருக்காது. ஒரு தென்னிந்திய முகமாகத்தான் இருக்கும். நிறமும் மாநிறம். இதனால் அவருடைய குடும்பமே பஞ்சாபில் இருந்து மும்பைக்கு வந்து செட்டில் ஆகிறார்கள். மும்பையில் மிட்டா பாய் என ஒரு பிரபலமான கல்லூரியில் பிகாம் படிக்கிறார் சிம்ரன் .
படிக்கும் போதே நாளிதழ்களில் வரும் அட்டை படத்திற்காக தன்னுடைய புகைப்படங்களை கொடுக்கிறார். ஆனால் அதற்கு அவருக்கு வாய்ப்பு வரவில்லை. ஏனெனில் அந்த காலகட்டத்தில் பாலிவுட் என்பது மிகப்பெரிய இரும்புக்கோட்டையாக கருதப்பட்டது. அவ்வளவு எளிதாக யாராலும் உள்ளே நுழைய முடியாது .அதனால் மிகவும் போராடுகிறார் சிம்ரன். அந்த சமயத்தில்தான் தூர்தர்ஷனில் அவருக்கு ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடிய வாய்ப்பு வருகிறது. அதை மிகவும் ஸ்டைலாக தொகுத்து வழங்குகிறார் சிம்ரன். அதை பார்த்த அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன் இவருக்கு நம்முடைய படத்தில் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறார். அவரை வைத்து ஒரு படத்தை எடுக்கிறார்கள்.
அந்தப் படத்திற்காக தான் ரிஷி பாலா என்ற பெயரை சிம்ரன் என மாற்றினார். ஆனால் அந்தப் படம் வரலாறு காணாத ஒரு அட்டர் பிளாப்பாக மாறியது. இதனால் அமிதாப்பச்சன் குடும்பமே கடனாளியாக மாறியது. ஏற்கனவே பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை. துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் .ஒரு படம் நடித்தும் அந்தப் படம் அட்டர் பிளாப். இதனால் ராசி இல்லாத நடிகை என அவரை தூக்கி வெளியில் போடுகிறார்கள். அந்த நேரத்தில் சோர்ந்து போகாமல் எப்படியாவது சினிமாவில் ஜெயித்தாக வேண்டும் என நினைக்கிறார். அப்பொழுது ஒரு மாடல் கோஆர்டினேட்டர் சிம்ரனிடம் நீ இங்கே இருக்கிற ஆள் கிடையாது.
தென்னிந்திய சினிமாவில் போய் முயற்சி செய் என அனுப்புகிறார். அதே மாதிரி இங்கே வந்து தெலுங்கில் ஒரு படம் கன்னடத்தில் ஒரு படம் நடிக்கும் பொழுது தான் தமிழில் விஐபி மற்றும் நேருக்கு நேர் ஆகிய இரு படங்கள் ஒரே நேரத்தில் அவரை தேடி வருகின்றன. இதில் விஐபி படம் தான் முதலில் ரிலீஸ் ஆனது. அதன் பிறகு சிம்ரனின் நடிப்பு அவருடைய கதை தேர்வு அவருக்கு கிடைத்த வாய்ப்பு என அடுத்தடுத்து அவருடைய கிராப் ஏறிக்கொண்டே போக அஜித்துடன் அவள் வருவாளா திரைப்படம் அவரை வேற லெவலில் கொண்டு போய் நிறுத்தியது. அஜித்தை தாண்டி சிம்ரனின் பெர்பார்மன்ஸ் அந்த படத்தில் இருந்தது.இப்படி துள்ளாத மனமும் துள்ளும், வாலி போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து கோலிவுட்டின் கனவுக்கன்னியாக மாறுகிறார் சிம்ரன் என செய்யாறு பாலு தெரிவித்தார்.