UPSC தேர்வு முடிவுகள்: நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் முதலிடம் - முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!
Seithipunal Tamil April 23, 2025 06:48 AM

இன்று வெளியாகியுள்ள UPSC தேர்வு முடிவுகளில் தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். 

இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் சிவச்சந்திரன் பயின்றவர் என்பதை முதல்வர் ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த #நான்_முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் #UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.