இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்..உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி..!
Top Tamil News April 23, 2025 11:48 AM

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் ஐடி கார்டை வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டு கொலை செய்தனர் என்றும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐடி கார்டு இல்லாதவர்களிடம் உள்ளாடையை நீக்க செய்து அதன் பின்னர் இந்து என்பதை உறுதி, தாக்குதல் நடத்தினார்கள்  என்றும் பொதுமக்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்துக்களை மட்டுமே குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்துக்கள் மத்தியில் பெரும் ஆத்திரமும் ஆவேசமும் ஏற்பட்டுள்ளது.

"பயங்கரவாதிகளுக்கு ஜாதி, மதம், இனம் கூட உண்டா? மதம் பார்த்துத்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்வார்களா?" என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர். இது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா, பாகிஸ்தான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.