பொதுவாக புளியை சமையலில் மட்டுமல்லாமல் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன் படுத்துகின்றனர் .அதனால் நாம் இப்பதிவில் புளியின் ஆரோக்கியம் பற்றி காணலாம்
1.புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது.
2.இந்த புளியம் பழத்தை கூழ் போல்செய்து அதில் சர்க்கரை சேர்த்து தண்ணீரில் கலந்து குடிக்க ஜுரம் பறந்து போகும் .மேலும் இந்த பழக்கூழ் மல சிக்கலையும் தீர்த்து வைக்கிறது .
3.மேலும் இந்த புளியை கொண்டு வாய் கொப்பளிக்க தொண்டை பிரச்சினைகள் குணமாகும் .மேலும் புண்களில் இந்த புளி தண்ணீர் விட்டு கழுவினால் ஆறாத புண்களை ஆற்றும் .
4.கொப்புளங்கள், தோலில் ஏற்படும் அரிப்புகளுக்கு பயன்படுத்தினால் நல்ல தீர்வு கொடுக்கும்.
5.மூட்டுகளில் வீக்கம் இருந்தால் இதை கொண்டு ஒத்தடம் தரலாம். ரத்தம் கலந்து மலம் கழிப்பவர்களுக்கு புளி கலந்து தேநீர் செய்து தருவதால் நல்ல பலன் கிடைக்கும்
6.அன்றாட சமையலில் அடிக்கடி பயன்படுத்தும் புளியை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிதளவு கல் உப்பைச் சேர்த்து கலந்து, பிசைந்து பசை போல் செய்து கொள்ள வேண்டும்.
7.பிறகு இந்தப் பசையை இரத்தக் கட்டு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டு வந்தால், இரத்தக் கட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.