#featured_image %name%
ஐ.பி.எல் 2025 –இரண்டு ஆட்டங்கள்- 20.04.2025
ரோஹித், கோலி அதிரடி ஆட்டம்முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பஞ்சாப் vs பெங்களூருபஞ்சாப் கிங்க்ஸ் அணியை (157/6, பிரப்சிம்ரன் சிங் 33, ஷஷாங்க் சிங் 31, ஜோஷ் இங்கிஷ் 29, மார்கோ ஜேன்சன் 25, பிரியான்ஷ் ஆர்யா 22, க்ருணால் பாண்ட்யா 2/25, சுயேஷ் ஷர்மா 2/26, ஷெப்பர்ட் 1/18) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (18.5 ஓவர்களில் 159/3, விராட் கோலி ஆட்டமிழக்காமல் 73, தேவதத் படிக்கல் 61, அர்ஷதீப் சிங், ஹர்பிரீத் ப்ரார், சாஹல் தலா ஒரு விக்கட்) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் முதல் நான்கு மட்டையாளர்களில் மூவர் சிறப்பாக ஆடினர். ஷ்ரேயாஸ் ஐயர் (6 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை.
பிரியான்ஷ் ஆர்யா (15 பந்துகளில் 22 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), பிரப்சிம்ரன் சிங் (17 பந்துகளில் 33 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்), ஜோஷ் இங்கிலிஷ் (17 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். பொதுவாக பஞ்சாப் அணியின் மட்டையாளர்கள் புவனேஷ் குமார், க்ருணால் பாண்ட்யா, சுயேஷ் ஷர்மா ஆகியோரின் பந்துவீச்சில் ரன் அடிக்க முடியாமல் தடுமாறினர்.
நெஹல் வதேரா (5 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (1 ரன்) விரைவில் ஆட்டமிழந்தனர். ஷஷாங்க் சிங் (33 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன், 1 ஃபோர்), மார்கோ ஜேன்சன் (20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன்) இறுதியில் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது.
157 ரன் என்ற எளிய வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான விராட் கோலி (54 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் தேவதத் படிக்கல் (35 பந்துகளில் 61 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினர்.
படிக்கல் இன்று அதிரடியாக ஆடினார்; கோலி அவருக்குப் பக்கபலமாக நின்றார். படிக்கல் ஆட்டமிழந்த பின்னர் ரஜத் படிதர் (12 ரன்), அவருக்குப் பின்னர் ஜிதேஷ் ஷர்மா (ஆட்டமிழக்காமல் 11 ரன்) இருவரும் கோலியுடன் இணைந்து வீளையாடி, அணியை 18.5 ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுக்க வைத்து வெற்றியைத் தேடித்தந்தனர்.
ஆட்டநாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.
சென்னை vs மும்பைசென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (176/5, ரவீந்தர் ஜதேஜா 53, ஷிவம் துபே 50, ஆயுஷ் மஹத்ரே 32, ஷேக் ரஷீத் 19, பும்ரா 2/25, தீபக் சாஹார், அஷ்வினி குமார், சாண்ட்னர் தலா ஒரு விக்கட்) மும்பை இந்தியன்ஸ் அணி (15.4 ஓவர்களில் 177/1, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 76, சூர்யகுமார் யாதவ் 68, ரியன் ரிக்கிள்டன் 24, ரவீந்தர் ஜதேஜா 1/28) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாடக் களமிறங்கிய சென்னை அணியில் இன்று முதல் முறையாகக் களமிறங்கிய ஆயுஷ் மஹத்ரே (15 பந்துகளில் 32 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஷிவம் துபே (32 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) தவிர பிற மட்டையாளர்கள் எவராலும் மும்பை அணியின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடமுடியவில்லை.
அதிக ரன் குவித்த ரவீந்தர் ஜதேஜா (35 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) வேகமாக ரன் குவிக்க முடியவில்லை. தொடக்க வீரர்கள் ஷேக் ரஷீத் (20 பந்துகளில் 19 ரன்), ரச்சின் ரவீந்த்ரா (9 பந்துகளில் 5 ரன்) மற்றும் பிற வீரர்களான எம்.எஸ். தோனி (6 பந்துகளில் 4 ரன்), ஓவர்டன் (3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 4 ரன்) ஆகியோர் மும்பை பந்துவீச்சாளர்களை அதிரடியாக அடித்து ஆட்டமுடியவில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்தது.
177 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த மும்பை அணியில் ரோஹித் ஷர்மா (45 பந்துகளில் 76 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்) இம்பாக்ட் பிளேயராக, தொடக்கவீரராகக் களமிறங்கினார்.
அவர் முதலில் ரியன் ரிக்கிள்டன் (19 பந்துகளில் 24 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடனும் பின்னர் சூர்யகுமார் யாதவ் (30 பந்துகளில் 68 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) உடனும் இணைந்து ஆடி 15.4 ஓவர்களில் அணிக்கு ஒரு விக்கட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்து, வெற்றியைத் தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. சென்னை அணி இனி பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லவியலாது.
ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டக்காரர், ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார்.
20.04.2025 இரவு வரை நடந்த ஆட்டங்களுக்குப்பின்னர் புள்ளிகள் பட்டியல்
அணி | மேட்ச் | வெற்றி | தோல்வி | புள்ளி | நெட் ரன் ரேட் |
குஜராத் | 7 | 5 | 2 | 10 | 0.984 |
டெல்லி | 7 | 5 | 2 | 10 | 0.589 |
பெங்களூரு | 8 | 5 | 3 | 10 | 0.177 |
பஞ்சாப் | 8 | 5 | 3 | 10 | 0.065 |
லக்னோ | 8 | 5 | 3 | 10 | 0.088 |
மும்பை | 8 | 4 | 4 | 8 | 0.483 |
கொல்கொத்தா | 7 | 3 | 4 | 6 | 0.547 |
ராஜஸ்தான் | 8 | 2 | 6 | 4 | -0.633 |
ஹைதராபாத் | 7 | 2 | 5 | 4 | -1.217 |
சென்னை | 8 | 2 | 6 | 4 | -1.392 |
News First Appeared in