காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மொத்தம் 26 பேர் பலியாகினர்.
இந்த நிலையில் திருமணம் ஆகி ஆறு நாட்களே ஆன கடற்படை அதிகாரியான 26 வயதுடைய லெப்டினன்ட் வினய் நர்வால் என்பவர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் பகுதியைச் சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால், தனது மனைவியுடன் பஹல்காமிற்கு தேனிலவு சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்த சம்பவம் குருதி தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
அங்கு அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.