இனிமேல் யாரும் ஏமாற வேண்டாம்.. ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு உதவி செய்கிறது ChatGPT..!
பொதுவாக ஆன்லைனில் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால், அந்த பொருளின் தரம், நிறுவனத்தின் நம்பிக்கை, விலை, மற்ற நிறுவனத்தின் விலை ஆகியவற்றை ஒப்பிடுதல் என பல்வேறு ஆலோசனைகள் பின்பற்றப்பட்ட பின்னரே வாங்குவோம் என்பது தெரிந்தது.
ஆனால், அத்தனைக்கும் ஒரே நிலையில் ChatGPT செய்து, உங்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கில் வழிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ‘Shopify’ என்ற அமைப்பு ChatGPTயுடன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் மூலம், ஒரு பயனர் “என்ன பொருளை வாங்க வேண்டும்?” என்பதை கேள்வி கேட்டால், அதற்கு உடனே ChatGPT, ‘Shopify’ உடன்தொடர்பு கொண்டு, அந்த பொருளின் தரம், என்னென்ன நிறத்தில் உள்ளது, விலை என்ன, அதே பொருள் வேறொரு நிறுவனத்தில் இருந்தால் அதன் விலை என்ன என ஒப்பீடு உள்ளிட்ட அனைத்தையும் டேபில் இருந்து வெளியேறாமலே கொடுக்கும் வசதியை செய்து தருகிறது.
குறிப்பாக, ஒரு ரன்னிங் ஷூ வாங்க வேண்டும் என்று ChatGPT இடம் கேட்டால், வெறுமனே அதன் விமர்சனம் மட்டுமல்லாமல் அதன் விலை, விற்பனையாளர் பக்கம் ஆகியவற்றுக்கு லிங்குடன் அழைக்கிறது. அந்த லிங்கை கிளிக் செய்தால் நீங்கள் வேறு டேப் போக வேண்டிய அவசியம் இல்லை; அதே டேப்பில் ஓபன் ஆகும்.
அதில், அந்த ரன்னிங் ஷூவின் விலை, மதிப்பீடு, ஷிப்பிங் விவரங்கள், இப்போது வாங்கலாமா அல்லது ஆஃபர் இன்னும் கொஞ்ச நாள் கழித்து வருமா என்பது உள்பட அனைத்து விவரங்களும் இருக்கும். அதே போல, அந்த நிறுவனத்தின் ரன்னிங் ஷூ குவாலிட்டியில் வேறு நிறுவனத்திடம் உள்ளதா? அதன் விலை என்ன? என ஒப்பிடும் செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு, அதில் தோன்றும் பட்டனை கிளிக் செய்தால், வாங்கும் செயல்முறைக்கு கொண்டு செல்லும். ‘Shopify’க்கு ஒரு மிகப்பெரிய வணிக வாய்ப்பாக இருக்கும் என்றும், ChatGPT பயன்படுத்தும் 800 மில்லியன் பயனர்கள் ஷாப்பிங் செய்தால் இது ஒரு மிகப்பெரிய விற்பனை அமைப்பாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் ‘ஓபன் ஏஐ’ ஆன்லைன் வர்த்தக உலகிலும் களமிறங்க போகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.