விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், மீனா மண்டபத்திற்கு பணம் கொடுப்பதற்காக அண்ணாமலை இடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அப்போது விஜயா, “இவளுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?” என்று யோசித்து, சிந்தாமணிக்கு போன் செய்து, “மீனா பணத்துடன் வருகிறார், எப்படியாவது அவளை தடுத்து விடுங்கள்,” என்று கூறுகிறார்.
இதனால் அதிர்ச்சி அடையும் சிந்தாமணி, தன்னுடைய ஆட்களிடம் “மீனாவிடம் இருந்து பணத்தை பறிக்க வேண்டும்” என்று திட்டமிடுகிறார். இந்த நிலையில், மீனா பணத்துடன் ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் சமயத்தில், பின்தொடர்ந்து வந்த சிந்தாமணி ஆட்கள், ஒரு கட்டத்தில் மீனாவிடமிருந்து பணத்தைப் பிடுங்குகின்றனர்.
பணத்தை காப்பாற்ற மீனா எவ்வளவு போராடினாலும் முடியவில்லை. மீனாவை கீழே தள்ளிவிட்டு, சிந்தாமணி ஆட்கள், பணத்துடன் சென்றுவிட, மீனா அதிர்ச்சி அடைந்து நடுரோட்டில் அழுகிறார். அப்போது வரும் மீனாவின் தோழிகள், அவரை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்த நிலையில், “பணத்தை அடித்து விட்டேன்,” என்று சிந்தாமணியிடம் அவருடைய ஆட்கள் சொல்ல, சிந்தாமணியும் மகிழ்ச்சியடைந்து மண்டபம் மேனேஜரிடம் சென்று, “அந்த ஆர்டரை எனக்கே கொடுத்து விடுங்கள்,” என்று கூறுகிறார். மேனேஜரும், “சரி, உங்களுக்கு தருகிறேன், டாக்குமெண்ட் ரெடி செய்கிறேன்,” என்று சொல்கிறார்.
இந்த நிலையில், மீனாவை மருத்துவமனையில் வந்து பார்க்கும் முத்து, “நீ ஒன்றும் கவலைப்படாதே, உனக்கு எதுவும் ஆகவில்லை என்பதே எனக்கு சந்தோசம். பணம் போனால் போய்விட்டு போகிறது. எப்படியாவது நாம் சம்பாதித்து கொடுத்துவிடலாம்,” என்று கூற, மீனாவோ அழுதுகொண்டு, “அந்த பணம் சீதா தனது கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம். அவருடைய பிரண்ட் இடம் கடன் வாங்கி கொடுத்திருந்தார். அந்த பணத்தை நான் எப்படி திருப்பி கொடுப்பேன்?” என்று கூற, சீதாவை கட்டியணைத்த முத்து, “கவலைப்படாதே, பணத்தை எப்படியாவது கண்டுபிடிக்கலாம்,” என்று கூறுகிறார்.
அப்போது டாக்டர் வந்து “மீனாவுக்கு பெரிய காயம் இல்லை, நீங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்,” என்று சொல்கிறார். வீட்டுக்கு சென்றவுடன், மீனாவின் கையில் உள்ள கட்டை பார்த்து, அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார். “என்ன ஏது?” என்று கேட்க, மீனாவும் முத்துவும் நடந்ததை செல்கின்றனர்.
அப்போது வெளியில் வருத்தப்படுவது போல் நடித்தாலும், உள்ளுக்குள் விஜயா குஷியாக இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோடில், மீனாவிடம் முத்து, “அது எந்த மண்டபம்? என்ன ஏது?” என்று விவரத்தை வாங்கிவிட்டு வெளியே செல்லும்போது, மீனாவின் குடும்பத்தினரை “சாப்பிட்டு போங்க” என்று சொல்கிறார். “எனது சாப்பாடா?” என்று விஜயா அலட்சியமாக கேட்பதுடன் நாளைய ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.