செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சநல்லூர் பகுதியில் டெய்சி ராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி. இவர் திடீரென கடந்த 3 நாட்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து டெய்சியை தேடி வந்தனர்.
இந்நிலையில் இவர் தற்போது பெசன்ட் நகர் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவருடைய மர்ம மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.