Retro: கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் அடுத்து ரிலீஸ் ஆகும் திரைப்படம் ரெட்ரோ. மே ஒன்றாம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக தான் இருக்கும் என்ற ஒரு டெம்ப்ளேட் மக்கள் மனதில் பதிந்து போயிருக்கிறது.
ஆனால் இது அந்த மாதிரியான படம் இல்லை என்று பல பேட்டிகளில் கார்த்திக் சுப்பராஜ் கூறி வருகிறார் .இது லவ் மற்றும் ஒரு ஆக்சன் திரைப்படமாகத்தான் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். படத்தில் அமைந்த அத்தனை பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
இந்த நிலையில் படத்தை பற்றி மேலும் சில தகவல்களை கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். முதலில் படத்தின் டைட்டிலை பற்றி அவர் கூறும் பொழுது இது ஒரு வித்தியாசமான டைட்டிலாக இருக்க வேண்டும் என அவர் ஆசைப்பட்டதாகவும் லவ் ஆக்சன் எமோஷனல் என ஒரு ஃபுல் மீல்ஸ் ஆக இந்த படம் அமைந்ததனால் ரெட்ரோ என்ற தலைப்பு இந்த படத்திற்கு பொருந்தும் என்று தான் இந்த தலைப்பை நான் தேர்ந்தெடுத்தேன் என கார்த்திக் சுப்பராஜ் கூறினார்.
அதுமட்டுமல்ல 90கள் காலத்தில் நாம் பார்த்த அந்த படங்கள் மாதிரியே இந்த படமும் இருக்க வேண்டும், அதைப் போல 90களில் மணிரத்தினம் படம் எப்படி இருக்கும்? உதாரணமாக தளபதி படம் மாதிரியே அதற்காக தளபதி படமாக இந்த படம் இருக்கும் என்று நான் சொல்லவில்லை. அந்த படத்தின் ஸ்கிரீன் ப்ளே எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு ஸ்கிரீன் ப்ளே தான் இந்த படத்தில் இருக்கும் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறினார்.
மற்றபடி இப்போது உள்ள டெக்னிக்கல் கேமரா இதைத்தான் நான் யூஸ் பண்ணி இருக்கிறேன் என்றும் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார். படத்தில் சூர்யாவின் லுக்கை பார்க்கும் பொழுதே நமக்கு தெரிகிறது 90 காலகட்டத்தில் உள்ள ஹீரோக்கள் எப்படி இருப்பார்களோ அந்த மாதிரியான ஒரு தோற்றத்தில் தான் சூர்யாவும் இருக்கிறார். பூஜாவும் அப்படித்தான் இருக்கிறார். அதனால் இந்த படம் சூர்யாவுக்கு நிச்சயமாக ஒரு காம்பேக் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.