காஷ்மீரில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் என்ற ரிசார்ட் நகரத்திற்கு அருகே உள்ள புல்வெளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் காயமடைந்த அனைவருக்கும் மும்பையில் ரிலையன்ஸ் பவுண்டேஷனின் Sir H.N மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் நாட்டிற்கு நாங்கள் முழுமையாக துணை நிற்கிறோம் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.