கடந்த 2008 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலேகான் நகரில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். அதோடு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகளாக நடக்கும் இந்த வழக்கில் வருகிற மே 8-ம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்நிலையில் மாலேகான் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்க சிறப்பு நீதிமன்றத்தில் NIA எழுத்துப்பூர்வமாக வாதம் செய்துள்ளது.