காஷ்மீரில் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் 26 பேர் பலியான நிலையில், இது குறித்து ஆலோசிக்க டில்லியில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். கூட்டம் தொடங்கிய நிலையில் இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், நட்டா, நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. ராஜ்யசபா அல்லது லோக்சபாவில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.,க்களை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டம் டில்லியில் தொடங்கியதில் இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், ஜேபி நட்டா நிர்மலா சீதாராமன் , காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், திமுக எம்.பி., திருச்சி சிவா, சமாஜ்வாதி, திரிணமுல், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட முக்கிய கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் காஷ்மீர் தாக்குதல் மற்றும் அரசு எடுத்த நடவடிக்கை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கூட்டம் துவங்கியம், தாக்குதலில் உயிர் இழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.