சிங்கப்பெண்ணே தொடரில் ஆனந்தி தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது சம்பந்தமாக ஓரளவு ஊகித்து விடுகிறாள். அதைப் பற்றித் தன் தோழிகளிடம் கூற, மித்ரா அதை ஒட்டுக் கேட்கிறாள். இனி நடந்தது என்ன என்று பார்ப்போம். ஆனந்திக்கு இப்போது தான் தனக்கு கடைசியாக என்ன நடந்தது? எங்கு மயக்கம் வந்தது என்ற நினைவு வந்தது. அது அவள் கம்பெனியின் வெள்ளி விழா நடந்த ரெஸ்டாரண்ட் தான் என்று தெரிந்து கொண்டார்.
அங்கு அவளைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்ல முயன்ற மர்ம நபர் குறித்தும் நினைவு படுத்தி சொல்கிறாள். அதனால் அந்த ரெஸ்டாரண்ட்ல போய் சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் இருந்தால் தன்னோட இந்த நிலைக்கு காரணமானவன் யாருன்னு தெரிஞ்சிடும்னு தோழிகள் சொல்ல அதுவும் சரிதான் என்று நினைக்கிறாள் ஆனந்தி.
அதனால் அவளுக்கு உதவியாக அவளது தோழிகள் ரெஜினாவும், காயத்ரியும் செல்கிறார்கள். ஆட்டோ பிடித்து போவதை மித்ரா பார்த்து விட்டு அவர்களைப் பின் தொடர்கிறாள். இவர்கள் எங்கே போகிறார்கள் என்று யோசிக்கும்போது அரவிந்த் மீட்டிங் இருக்குன்னு அதே வெள்ளி விழா நடந்த ரெஸ்டாரண்டுக்கு மித்ராவை அழைத்து வந்து விடுகிறான்.
ஆனந்தி ஏறிய ஆட்டோவும் அங்கு வர மித்ராவுக்கு பயம் வருகிறது. ஒருவேளை ஆனந்திக்கு எல்லாமும் நினைவுக்கு வந்துவிட்டதா? க்ளூவைத் தேடித்தான் வந்து விட்டார்களா என்று பயப்படுகிறாள். ஆனந்தியும் ஒவ்வொரு இடமாகப் பார்த்தவாறு தனக்கு நேர்ந்த அவலங்களை தோழிகளிடம் விவரித்து வருகிறாள். கடைசியில் மயக்கம் தெளிந்த இடத்தையும் காட்டுகிறாள்.
ரெஸ்டாரண்டில் இருப்பவர்களிடம் சிசிடிவி ஃபுட்டேஜ் கேட்க அவர்கள் எதற்கு என்று கேட்கிறார்கள். ஆனந்தியின் மோதிரம் தொலைந்து விட்டது. அதைத் தேடுவதற்குத் தான் என்கிறார்கள். அதன்பிறகு அவர்களும் தேடித் தருவதாகச் சொல்கிறார்கள். இதற்கிடையில் மித்ரா அவர்களை ஃபாலோ பண்ணுகிறாள்.
அன்புவும் ஆனந்தியைத் தேடி ஹாஸ்டலுக்கு வருகிறான். அங்கு ஆனந்தி வெளியில் போயிருப்பதாகச் சொல்லவும் போன் செய்து ஆனந்தியிடம் பேசி விட்டுச் செல்கிறான். மகேஷ், அவனது அப்பா, அரவிந்தன், மித்ரா, கிளையண்ட்ஸ்னு எல்லாரும் ரெஸ்டாரண்ட்டில் மீட்டிங் ஹாலுக்குச் செல்கின்றனர். ஆனந்திக்குத் தடயம் கிடைத்ததா? என்பதை அடுத்த எபிசோடில் காணலாம்.