அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் நாடு திரும்பியுள்ளனர்..!
Seithipunal Tamil April 25, 2025 08:48 AM

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தனது மனைவி உஷா மற்றும் 03 குழந்தைகளுடன் 04 நாள் பயணமாக இந்திய வந்தார்.

கடந்த 21-ந்தேதி இந்தியா வந்த அவர் முதலில் டெல்லியில் அக்ஷர்தாம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன், டெல்லியில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் ராஜஸ்தானுக்கு குடும்பத்துடன் சென்றார். ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டையை 22-ந்தேதி சுற்றிப்பார்த்த ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் மேலும் பல இடங்களை பார்வையிட்டனர்.

இதனை தொடர்ந்து, 23-ஆம் தேதி ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு சென்றனர். மீண்டும்  ஜெய்ப்பூர் திரும்பிய ஜே.டி.வான்ஸ், அங்கே மேலும் சில நிகழ்வுகளில் அவர்கள் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு நாடு திரும்பியுள்ளனர். சிறப்பு விமானம் மூலம் ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.