சென்னை துரைப்பாக்கத்தில் மேட்டுகுப்பம் பி டி சி சாலைபல்லவன் குடியிருப்பில் ஐடி ஊழியராக பணி புரிந்தவர் டில்லி பாபு[வயது33].எப்போதும் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது ஷீவுக்கு அடியில் சாவியை வைப்பது வழக்கம் . சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் சாவியை ஷீவில் வைத்துள்ளார் . மனைவியும் விட்டில் இல்லை வெளியே சென்றிருக்கிறார் .
வெளியே சென்ற மனைவி வீட்டிற்கு வந்ததும் வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தாள். பீரோவில் இருந்த 20 பவுன் நகை கொள்ளைபோனதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தால்.கண்ணகி நகர் போலிசார் இது குறித்து விசாரனை நடத்தினார்.அருகில் உள்ள கேமராவில் பதவான காட்சியின் விசாரனை அரம்பித்தனர்.
போலிசாரின் விசாரனையில் துரைபாக்கத்தை சேர்ந்த மீனா ரம்யா கஸ்தூரி கலைவானி ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.இவர்கள் டில்லி பாபு வின் விட்டில் வேலை செய்வதும் அவர் சாவியை அங்கே வைப்பதையும் நோட்டமிட்டுள்ளனர்.கொள்ளையர்களின் வீட்டிலிருந்து 19 சவரன் நகையும் பரிமுதல் செய்த போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.