57.5 டன் தங்கத்தை வாங்கிக் குவித்த இந்திய ரிசர்வ் வங்கி!
ET Tamil April 25, 2025 05:48 PM
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த 7 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அதிக அளவிலான தங்கங்களை டன் கணக்கில் வாங்கிக் குவித்துள்ளது. இம்முறை 57.5 டன்கள் தங்கத்தை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது, இது ஒரு முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்றாகும். ரிசர்வ் வங்கி ஏன் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகிறது, இதன் பின்னணி என்ன என்பதை இனி விரிவாகப் பார்க்கலாம். சர்வதேச நிதி நிலைத்தன்மையை உறுதிபடுத்துதல்தங்கம் என்பது மக்களுக்கு மட்டும் பாதுகாப்பான ஒன்றாக இல்லை, அரசுக்கும் பாதுகாப்பான, அதேசமயம் நிலையான மற்றும் பாதுகாப்பான சொத்தாக கருதப்படுகிறது. சர்வதேச நிதி சந்தைகளில் உண்டாகும் அசாதாரண நிலைகள், பொருளாதார அதிர்வுகள் மற்றும் பணவீக்கம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும், நிலையை கட்டுக்குள் வைக்கவும், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை ஒரு கேடயமாக பயன்படுத்த உதவும் என்பதால் வாங்கி வருகிறது. மேலும் RBI தன் பணப்புழக்கத்தை மற்றும் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களை பாதுக்காக்கவும் நோக்கமாகக் கொண்டு தங்கத்தை வாங்கி வருகிறது. பணம் மற்றும் நாணய நிலைத்தன்மைதங்கத்தை வாங்குவதன் மூலம் RBI, இந்தியாவின் ரூபாய் மதிப்பை நிலைப்பெறச் செய்யும். உலக சந்தைகளில் நாணய மாற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களை சமாளிக்க தங்கம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சர்வதேச நிதி சந்தைகளில் நிலைத்தன்மை உருவாக்குதல்தற்போது உலகளாவிய பொருளாதார அதிர்வுகள், கடன் சுமைகள், பணவீக்கம் போன்ற பிரச்சனைகள் காரணமாகவே RBI தங்க இருப்பை உயர்த்தியுள்ளது. இது நாட்டின் நிதி நிலைத்தன்மையை சர்வதேச சந்தைகளிலும் உறுதி செய்யும். ரிசர்வ் வங்கி ஏற்கனவே தங்க கையிருப்பகளை உயர்த்தி வருகிறது. இதன் மூலம் இந்தியா தனது பொருளாதார நிலையை பாதுகாக்கும். எதிர்கால சவால்களை சமாளிக்க உதவும்.இந்திய ரூபாயின் மதிப்பை பாதுகாக்கவும், இந்தியாவின் பொருளாதார நிலையை வலுப்படுத்தவும் உதவும். மேலும் எதிர்கால பொருளாதார சவால்களை சமாளிக்க தங்கம் பெரும் உதவியாக இருக்கும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.