ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என சொல்வதே தோல்வி... இது நம் நாட்டின் பாதுகாப்பின் பலவீனத்தை காட்டுவது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் நிழற்குடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “அண்ணன் தம்பியாக இருந்தாலும் கொள்கைகளும் பாதைகளும் வேறு வேறு ஆகிவிட்டது. ஆகவே விஜயுடன் அண்ணன் தம்பி உறவு தான் இருக்கிறது, கொள்கை உறவு இல்லை. பாமக மாநாட்டிற்கு அழைப்பிதழ் வந்துள்ளது. அதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்... எங்கள் ஐயா கூப்பிட்டா போவேன்.
செந்தில் பாலாஜி விவாகரத்தில் உனக்கு ஜாமின் வேணுமா அமைச்சர் பதவி வேணுமா எனக் கேட்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை. நீதிமன்றம் தீர்ப்பை தான் சொல்லணும். ஒரு தீவிரவாதி ஊடுருவி விட்டான் என சொல்வதே தோல்வி. இது நம் நாட்டின் பாதுகாப்பின் பலவீனத்தை காட்டுகிறது. இதை நாம் பாதுகாப்பின் குறைபாடு என்றே சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் மீது குறை கொள்வது ஏற்ற முடியாது, எந்த மதத்தில் தான் தீவிரவாதம் இல்லை. திடீர்னு ஒரு வன்முறை நடந்தால் அதை ஒரு மதத்தின் மீது பழி போடுவது ஏற்புடையது அல்ல. சீனா கூட அருணாச்சல் பிரதேசம் என்னுடையது என சொல்கிறான். அவன்கிட்ட போர் தொடுப்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.