பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது: தேசிய மனித உரிமைகள் ஆணையம்..!
Seithipunal Tamil April 26, 2025 08:48 AM

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; 

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளதாகவும், விடுமுறையை கழிக்கச் சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான தாக்குதலை ஆணையம் கண்டிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன்,  மனித உரிமை மீறல்களுக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய காரணங்களில் ஒன்று என்று பல்வேறு மன்றங்களில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு அவர்களை பொறுப்பேற்க வைப்பதற்கும் நேரம் வந்துவிட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.