வரலாற்று பிரசித்தி பெற்ற பழவேற்காடு மகிமை மாதா தேவாலயத்தின் 547-ஆம் ஆண்டு திருவிழா தொடக்கம்..!
Seithipunal Tamil April 26, 2025 08:48 AM

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழவேற்காட்டில் மிகப் பழமையான புனித மகிமை மாதா திருத்தலத்தின் 547-ஆம் ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.  இவ்விழாவை சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார். 

புனித மகிமை மாதாவின் திருக்கொடி அர்ப்பணிப்பு திருப்பணி முடிந்து, பழவேற்காடு கடற்கரை மற்றும் முகத்துவாரம் வரை படகில் கொடி பவனி வந்து, தேவாலயம் அமைந்துள்ள பழவேற்காடு பகுதியின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.

பின்னர் பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தல அதிபரும் பங்கு தந்தையுமான கே.ஜெ.வர்கீஸ் ரொசாரியோ தலைமையில், திருத்தல கொடிமரத்தில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணிசாமி மந்திரித்து, கொடி பாடல் முழங்க கொடியேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து 10 நாட்களுக்கு திருப்பலி நடைபெற்று, வரும் மே 03-ஆம் மற்றும் 004-ஆம் தேதிகளில் அன்னையின் ஆடம்பர தேர் திருவிழா நடைபெரவுள்ளது. இதில் பழவேற்காடு சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.