டாஸ்மாக்கில் நடைபெற்ற ரெய்டில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன் மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோருக்கு சம்மன் அளித்துள்ளது.
இதைத்தொடர்ந்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல், பொது மேலாளர்கள் சங்கீதா, ராம துரைமுருகன் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.