குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தற்கொலை... கோட்டாட்சியர் விசாரணை!
Dinamaalai April 26, 2025 03:48 AM

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மீளவிட்டானைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் செபஸ்டின். இவரது மனைவி ஜெமினி கிமிலா (29). இவர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந் நிலையில் ஜெமினி கிமிலா குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 22-ந் தேதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.