வைட்டமின் டி உணவு பொருட்கள் நம் உடலின் எந்த பாகத்தை காக்கும் தெரியுமா ?
Top Tamil News April 26, 2025 09:48 AM

பொதுவாக முதுமையில் வரும் எலும்பு தேய்மானம் முதல் எலும்பு பலவீனம் போன்ற நோய்கள் வராமல் நாம் நம் உடலை எப்படி காக்கலாம் என்று நாம் இப்பதிவில் காணலாம்
 
1.நாம் உண்ணும் பச்சைக் காய்கறிகள்   எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2.இந்த பச்சை காயில்  வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், போலேட், வைட்டமின் பி1, பி2, பி3, பி5 மற்றும் பி6 ஆகியவை உள்ளன.


3.நாம் தினமும் இந்த காய்கறிகளை உண்பதால் நம்  ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
4.பருப்பு வகைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. பால் பொருட்கள் தவிர இவற்றை அதிகம் உட்கொள்ளலாம். 5.இதில், புரதம், நார்ச்சத்து ஆகியவற்றுடன் கால்சியமும் கிடைக்கும். இவை நமது செரிமான அமைப்புக்கும் நல்லது. நமது ஆற்றலை அதிகமாக்கும்.
6.வைட்டமின் சி அதிகம் இருக்கும்  ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, நெல்லிக்காய், ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம்.
7.வைட்டமின் ேக சத்துக்கள் அதிகம் கொண்ட முட்டைகோஸ், காலிபிளவர், துளசி, கொத்தமல்லி, லெட்டூஸ் கீரை ஆகியவை சாப்பிடலாம்.
8.பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டை, ஓட்ஸ், இறைச்சி போன்ற புரதச்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்ளலாம்.
9.காளான், முட்டையின் மஞ்சள் கரு, மீன், சோயா பால் போன்றவை வைட்டமின் டி உள்ளடங்கிய உணவு பொருட்கள். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.