PadmaBhusan Ajith: ஆண்டுதோறும் குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்தாண்டும் குடியரசுதலைவர் மாளிகையில் விழா நடைபெற்றது . நேற்று நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பேர் பத்ம விருதுகளை பெற்றுக் கொண்டனர். கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
19 பேர் தேர்வாகினர்: அந்த வகையில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. நேற்று நடந்த இந்த விழாவில் அஜித் தன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். தனக்கே உரிய பாணியில் கோட் சூட்டுடன் வந்து அந்த விருதை பெற்றுக் கொண்டார் அஜித். அஜித் உட்பட மொத்தம் 19 பேருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
திரௌபதி முர்மு வாழ்த்து: 7 பேர் பத்ம விபூஷன் விருதையும் 113 பேர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுக் கொண்டனர். இதில் கலைத்துறை சார்பாக அஜித், நடிகை ஷோபனா, இயக்குனர் சேகர் பாபு, பாலையா உட்பட பலர் பெற்றுக் கொண்டனர். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கினார். அரங்கில் பிரதமர் மோடி, அமித்ஷா உட்பட ஏராளமான அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
விஜய் வாழ்த்து: தமிழ் நாட்டில் இருந்து சுமார் 10 பேர் பத்ம விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இதில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனும் அடக்கம். அவரும் அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்த நிலையில் பத்மபூஷன் விருது பெற்ற அஜித்துக்கு அவருடைய திரையுலக நண்பரும் நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
அந்த வாழ்த்தில் நண்பர் அஜித்துக்கு விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் என பதிவிட்டு அஜித் விருதை பெற்றுக் கொள்வதுமாதிரியான புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். இதிலிருந்து விஜய் ரசிகர்களும் அஜித்துக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
இதோ அந்த லிங்க்: https: