திக், திக் நிமிடங்கள்... விமானம் தரையிறங்க பிரேக் பிடிக்கல... அலறி கூச்சலிட்ட 314 பயணிகள்!
Dinamaalai April 29, 2025 08:48 PM

சென்னை விமான நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று. இங்கு கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 314 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 326 பேருடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.  


இந்த விமானம் சரியான அதிகாலை 2.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும். தரையிறங்க தயாராக இருந்த போது விமானி, விமானத்தில் இயந்திரங்கள் அனைத்தையும் சரி பார்த்தார். அப்போது விமானத்தின் பிரேக் சிஸ்டம் திடீரென செயல் இழந்தது  தெரியவந்தது. உடனே இதுகுறித்து  சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து எமர்ஜென்சிங் முறையில் தரை இறக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டு வந்தது. 


பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. எமர்ஜென்சிங் எக்ஸிட் சரிவர செயல்படுகிறாரா என்பதையும் சரிபார்த்து கொண்டனர். இதனால் பயணிகள் அனைவரும் என்னமோ இதோ என்று பதற்றம் அடைந்துவிட்டனர். சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையில் தீயணைப்பு வண்டிகள், மருத்துவக் குழுவினர், மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.  இதையடுத்து, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.