இளையராஜா பண ஆசை கொண்டவர் கிடையாது… விஜய் ஆண்டனி பகிர்வு…
Tamil Minutes April 29, 2025 08:48 PM

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் ஒலிப் பொறியாளராக தனது கேரியரை தொடங்கிய விஜய் ஆண்டனி சுக்ரன் திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் திரைப்படத்திற்கு இசையமைத்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார்.

தொடர்ந்து நான் அவன் இல்லை, நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், உத்தமபுத்திரன், அங்காடித்தெரு போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. 2014 ஆம் ஆண்டு சலீம் திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இசையமைப்பதை விட நாயகனாக நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் விஜய் ஆண்டனி.

2016 ஆம் ஆண்டு பிச்சைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்று அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் விஜய் ஆண்டனி. பின்னர் இந்தியா பாகிஸ்தான், சைத்தான், அண்ணாதுரை, திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன், பிச்சைக்காரன் 2 போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி இளையராஜா காப்பிரைட் கேட்பதை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், இளையராஜா அவர்கள் பண ஆசை கொண்டவர் அல்ல. அவர் இசையமைத்த பாடலை பயன்படுத்தும் போது தம்மிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என்ற எண்ணத்தில் தான் அவர் இப்படி செய்கிறார் என்று பகிர்ந்து இருக்கிறார் விஜய் ஆண்டனி.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.