நடிகர் ரஜினிகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை திடீரென சந்தித்துள்ளார்.
அப்போது எஸ்பி வேலுமணி மற்றும் அவரது குடும்பத்தினர் நடிகர் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அப்போது எஸ்.பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் மற்றும் தீக்ஷனா தம்பதியினருக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து தெரிவித்தார். மேலும் புதுமண தம்பதிக்கு ராகவேந்திரா படத்தையும் நினைவு பரிசாக வழங்கினார் ரஜினிகாந்த். விஜய் விகாஸ் – தீக்ஷனா தம்பதியினருக்கு கடந்த மார்ச் மாதம் கோவையில் திருமணம் நடைபெற்றது.
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல் முருகன் மற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர். அப்போது ரஜினிகாந்தால் பங்கேற்க முடியாத நிலையில் இன்று எஸ்பி வேலுமணி வீட்டிற்கு சென்று நேரில் வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.