பங்குச்சந்தை இன்று 2வது நாளாக ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!
WEBDUNIA TAMIL April 29, 2025 03:48 PM

நேற்று, வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது என்பதும், வர்த்தக முடிவில் 1000 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நல்ல லாபம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளது. என்றாலும், மிகவும் சிறிய அளவில் ஏற்றம் கொண்டிருப்பதால் மீண்டும் சரியும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 25 புள்ளிகள் உயர்ந்து ’80,742’ என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்டி இரண்டு புள்ளிகள் மட்டும் உயர்ந்த ’24,330’ என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தையில், ’ஆசியன் பெயிண்ட்’, ’ஆக்ஸிஸ் வங்கி’, ’பாரதி ஏர்டெல்’, ’எச்.சி.எல்டெக்னாலஜி’, ’இண்டஸ் இன்ட் வங்கி’, ’கோடக் வங்கி’, ’பாரத ஸ்டேட் வங்கி’, ’டாட்டா மோட்டார்ஸ்’, ’டெக் மகேந்திரா’, ’டைட்டன்’ உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.

அதேபோல், ’டாட்டா ஸ்டீல்’, ’சன் பார்மா’, ’மாருதி’, ’ஐ சி ஐ சி வங்கி’, ’ஹீரோ மோட்டார்ஸ்’, ’ஹெச்டிஎஃப்சி வங்கி’, ’சிப்லா’, ’பஜாஜ் பைனான்ஸ்’, ’அப்பல்லோ ஹாஸ்பிடல்’ உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.